உலகம்

மத்திய பிரதேச முதல்வர் யார்? இன்று அறிவிக்கிறார் ராகுல் காந்தி!

Published

on

போபால்: மத்திய பிரதேச முதல்வர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் இன்று தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள  230 தொகுதியில் பாஜக 109 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு பெரும்பான்மை பெற 116 இடங்கள் தேவை.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் துணையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் யார் என்று இன்று அறிவிக்கப்படுவார்.

நேற்று இரவே மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது. மத்திய பிரதேச முதல்வர் ஆனந்தி பென் பாட்டீலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கூட்டாக சென்று உரிமை கோரினார்கள்.

 

 

 

 

Trending

Exit mobile version