தமிழ்நாடு

ஒரே மேடையில் ராகுல் – உதயநிதி..! – அவனியாபுரம் களத்தில் அரங்கேறும் தேர்தல் கணக்குகள்

Published

on

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண மதுரை, அவனியாபுரத்துக்கு வந்தார். அப்போது திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அங்கு வந்தடைந்தார். இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டி குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில்தான் காங்க்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பின் மூலம் தேர்தல் வியூகங்கள் குறித்து ராகுலும் உதயநிதியும் பேச வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. இன்று மாலை வரை ராகுல், தமிழகத்தில்தான் இருப்பார் எனத் தெரிகிறது. நாளின் பிற்பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களுடன் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட இருக்கிறார் ராகுல். தொடர்ந்து கட்சியின் மாநில நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் கணக்குகள் குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் அரசியல் தலைநகரமாக அறியப்படுவது மதுரைதான். எந்தவொரு அரசியல் கட்சியும், தங்கள் வியூக கணக்குகளை மதுரையிலிருந்துதான் ஆரம்பிக்கும். அந்த வகையில் மதுரையையும் தமிழக அரசியலையும் பிரிக்கவே முடியாது. அப்படிப்பட்ட மதுரை மண்ணில் ராகுலும் உதயநிதியும் சந்தித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

 

Trending

Exit mobile version