இந்தியா

ஒரு வாரத்திற்கு பின் மீட்கப்பட்டது ராகுல் காந்தி டுவிட்டர்!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கம் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் தற்போது மீண்டும் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் டெல்லியில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவு செய்தார்.

இதற்கு தேசிய குழந்தைகள் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் திடீரென மூடப்பட்டது. அதுமட்டுமின்றி டுவிட்டர் விதிகளை மீறியதாக இந்திய தேசிய காங்கிரஸ் டுவிட்டர் பக்கம் உள்பட சுமார் 5000 ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி ராகுல் காந்தி உள்பட அனைத்து காங்கிரஸ் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்குகள் அதிரடியாக மீட்கப்பட்டதாகவும் இது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு பின் ராகுல் காந்தி உள்பட அனைத்து காங்கிரஸ் கட்சி நிறுவனங்கள் நீக்கப்பட்டதை காங்கிரஸ் ஆட்சியில் தொண்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் நெருக்குதல் காரணமாகவே ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டுவிட்டர் பக்கங்களில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version