இந்தியா

ராகுல் காந்தி டுவிட்டர் பக்கம் திடீர் முடக்கப்பட்டதா?: அதிர்ச்சியில் காங்கிரஸார்!

Published

on

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் நேற்று நீக்கப்பட்ட நிலையில் இன்று தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொலையான சிறுமியின் பெற்றோர்களை தனது காரில் அழைத்து அவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். உங்கள் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க நான் உறுதுணையுடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதை அடுத்து தேசிய குழந்தைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து டுவிட்டர் நிர்வாகத்துக்கு தேசிய குழந்தை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி சம்பந்தப்பட்ட ட்வீட்டை நீக்க வேண்டுமென்று வலியுறுத்தியது.

தேசிய குழந்தைகள் ஆணையத்தின் பரிந்துரையின்படி ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்தில் இருந்த அந்த புகைப்படம் நீக்கப்பட்டது. இதனால் காங்கிரசார் கடும் அதிர்ச்சி அடைந்து டுவிட்டர் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அவருடைய டுவிட்டர் பக்கம் முடக்கப்படவில்லை என்றும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்து மற்ற சமூக வலைத்தளங்களில் செயல்படுவார் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கின் மறுசீரமைப்புக்கு உரிய செயல் முறை பின்பற்றப்படுகிறது என்றும் அதுவரை மற்ற சமூக வலைதளங்களில் ராகுல்காந்தி தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பார் என்றும் குறிப்பாக சிறுமியின் பெற்றோர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர் போராடுவார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து காங்கிரஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version