இந்தியா

‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!’- மீண்டும் காங்கிரஸ் தலைவராகும் ராகுல் – எப்போது தெரியுமா?

Published

on

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ராகுல் காந்தி, மீண்டும் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என்று தகவல் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்து வருவது சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக அவரால் சரிவர செயல்பட முடியாத காரணத்தால், வரும் ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். 

இந்நிலையில் இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, சோனியா காந்தி, .சிதம்பரம் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் 5 மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்துள்ளது. அதில் அனைத்துத் தலைவர்களும் ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

மேலும் கட்சியின் அனைத்துத் தளங்களிலும் சீர்திருத்தங்கள் தேவை என்றும் வாதிட்டுள்ளனர் நிர்வாகிகள். இதனால் வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தோல்வியடைந்த பின்னர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அவரது ராஜினாமாவுக்குப் பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தன் முடிவிலிருந்து மாறாமல் இருந்தார் ராகுல். 

இந்நிலைய நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல், ‘காங்கிரஸ் கட்சி நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறதோ அதன்படி செயல்பட தயார்என்று உறுதிபட தெரிவித்துள்ளாராம். இதனால் ஜனவரி மாதம், மீண்டும் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. 

Trending

Exit mobile version