இந்தியா

ராகுல் காந்திக்கு விசித்திரமான வியாதி உள்ளது: அமித்ஷா கிண்டல்!

Published

on

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி ஃபோபியா பாதிப்பு உள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்து கிண்டலடித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் செல்லும் இடமெல்லாம் பாஜகவையும், பிரதமர் மோடியையும் மிகக்கடுமையாக குற்றம்சாட்டி, விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதமாக நேற்று பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, ஒருமுறை ராகுலின் உரைகளைக் கேட்டபோதுதான் அவரது உரைகளில் மோடி பற்றிய ஓர் ஒற்றைத் தன்மையுடன் கூடிய பிரச்சினை இருப்பதைக் கண்டுகொண்டேன்.

ராகுல் காந்தி, மோடி ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் மோடி, மோடி என்று கூச்சலிடுகிறார். ராகுலிடம் பேசுவதற்கு என்று எதுவும் இல்லை. அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோது நடந்த ஊழல் குறித்து பேச முடியாது. வளர்ச்சி குறித்தும் பேச முடியாது. அவர்கள் ஆட்சியில் அப்படி ஒன்று இருந்ததே இல்லை. ராகுலின் பேச்சுகளை பார்க்கும்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்கிறாரா அல்லது பாஜகவுக்குப் பிரச்சாரம் செய்கிறாரா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

seithichurul

Trending

Exit mobile version