இந்தியா

மோடிக்கு பரிட்சை வைக்கும் ராகுல் காந்தி: பட்டைய கிளப்பும் அரசியல் சரவெடி!

Published

on

நேற்று மக்களவையில் நடைபெற்ற ரஃபேல் கொள்முதல் விவகாரம் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தில் தனது கேள்விகளை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாமல் பிரதமர் மோடி அறையில் பதுங்கி இருக்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்.பி.க்கள் பின்னால் ஒளிந்திருக்கிறார் என கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்குத் திறந்த புத்தகத் தேர்வு நாடாளுமன்றத்தில் நடத்தப்படுகிறது. அதற்கான கேள்விகள் முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1: 126 ரஃபேல் போர் விமானங்கள் ஏன் 36 விமானங்களாகக் குறைக்கப்பட்டது?

கேள்வி 2: ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை ரூ.560 கோடியாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு பின்னர் ஒரு விமானத்தின் விலை ரூ.1600 கோடியாக மாற்றப்பட்டது ஏன்?

கேள்வி 4: .இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்(எச்ஏஎல்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் பின்னர் ஏன் ஏஏ(அனில்அம்பானி) நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது?

மேலும் மூன்றாவது கேள்வியை மட்டும் தனியாக பதிவு செய்துள்ள ராகுல் காந்தி, மோடிஜி தயவுசெய்து பதில் கூறுங்கள், ரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பான ஆவணங்களை ஏன் மனோகர் பாரிக்கர் தனது படுக்கை அறையில் வைத்துள்ளார். அதில் அப்படி என்ன இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த அதிரடி டுவிட்டர் பதிவு பாஜகவினர், காங்கிரஸ் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது ராகுல் காந்தியின் அரசியல் செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளது. ராகுல் காந்தி வலிமைமிக்க தலைவராக உருவெடுத்துள்ளார் என்பதை அவரது சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் காட்டுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ராகுல் அதிர்ச்சியளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

seithichurul

Trending

Exit mobile version