இந்தியா

மோடியை சிறைக்கு தள்ளும்: நாகர்கோவிலில் ராகுல் காந்தி ஆவேசம்!

Published

on

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின் முதல் பார்வை தமிழகமாக உள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்து கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட்டார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி தனது கூட்டணி கட்சிகளுக்காக தமிழகத்தில் இன்று பிரச்சாரம் செய்தார். முன்னதாக சென்னையில் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி பின்னர் கன்னியாகுமரிக்கு வந்தார்.

கன்னியாகுமரியில் நாகர்கோவில் ஸ்காட் கல்லூரில் அமைக்கப்பட்டுள்ள பிரச்சார மேடையில் அவர் உரையாற்றினார். இந்த பிரச்சார மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களான, மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கவிஞர் திருவள்ளூவர் உண்மை வெல்லும் என்று கூறியுள்ளார். உண்மை, பிரதமர் மோடியை சிறையில் தள்ளும் என்றார் ஆவேசமாக.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலையில்லாப் பிரச்னை நிலவுகிறது. கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி வரியால், முறைசாரா தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அழிந்தன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே வரி, எளிமையான வரி, குறைந்தபட்ச வரியை அமல்படுத்துவோம். கடை உரிமையாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள் இந்த மோசமான ஜி.எஸ்.டிவரியால் பாதிக்கப்படமாட்டார்கள் என்றார்.

Trending

Exit mobile version