இந்தியா

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published

on

2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

#image_title

2019-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் என்பவர் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் தலைமை குற்றவியல் நீதிபதி, ஹெச்.ஹெச்.வர்மா இன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கினார். அதன்படி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version