இந்தியா

பி.எம்.கேர்ஸ் நிதிக்கு என்னதான்பா ஆச்சு..?- மத்திய அரசை விடாமல் குடையும் ராகுல் காந்தி

Published

on

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று, பன் மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு சில நாட்களுக்கு முன்னர் லாக்டவுன் உத்தரவுப் பிறப்பித்து உத்தரவிட்டது முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு. இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் வார இறுதி லாக்டவுன் உத்தரவை அமல் செய்ய உள்ளது டெல்லி. 

இதையடுத்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசு ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதி வரை திகா உத்சவ் எனும் தடுப்பூசி திருவிழாவை நடத்தியது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமலும், தேவையான வசதிகள் இல்லாமலும் பல்வேறு மாநிலங்கள் திணறுகின்றன. படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், தடுப்பூசி இல்லாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. மத்திய அரசின் தொகுப்பில் இருக்கும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனப் பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கையாண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் இல்லை, பரிசோதனையும் இல்லை. வென்டிலேட்டரும் இல்லை, ஆக்ஸிஜனும் இல்லை. தடுப்பூசியும் பற்றாக்குறையாக இருக்கிறது. ஆனால், போலித்தனமாக தடுப்பூசி திருவிழா நடத்துகிறார்கள். மிகப்பெரிய அளவில் நன்கொடை பெறப்பட்டு உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி என்ன ஆனது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version