தமிழ்நாடு

ரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா? ராகுல்காந்தி சாட்டையடி கேள்வி

Published

on

கொரோனா வைரஸால் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 3408 கோடி ரூபாய் மதிப்பில் 3 செயலகங்கள் கட்டும் பணி தேவையா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஏற்பாடு செய்தால், ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்குதல், கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாட்டை சரிசெய்தல் உள்பட பல்வேறு மக்கள் உயிரை காக்கும் பணிகள் இருக்கும் நிலையில் ரூபாய் 3408 கோடி மதிப்பில் மத்திய அரசு மூன்று தலைமை செயலகங்களை கட்டும் பணியில் தீவிரமாக உள்ளன.

இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ’கொரோனா பரிசோதனைக்கான ஏற்பாடுகள் இல்லை, தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜனும் இல்லை, ஐசியூவில் இடமில்லை, மக்களின் தேவைக்காக எந்தவித முன்னேற்பாடும் செய்யாத மத்திய அரசு மூன்று தலைமை செயலகங்களைகட்டும் பணியில் முக்கியத்துவம் செலுத்துவது எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த கேள்விக்கு மத்திய அரசின் தரப்பில் என்ன பதில் கூறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version