இந்தியா

தடுப்பூசி விவகாரத்தை சரியாக கணித்த ராகுல்; மத்திய அரசுக்கு கொடுத்த பன்ச்!

Published

on

நாட்டில் கொரோடா தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன. அதே நேரத்தில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சில அரசியல் கட்சி தரப்புகள், நாட்டில் 18 வயது கடந்த அனைவருக்கும் கொரோடா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இதை ஏற்க மறுத்து கருத்து தெரிவித்துள்ளது அரசு. இது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

நாட்டில் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் இல்லை என்பது தான் மத்திய அரசின் இந்த அதிர்ச்சி முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் பல கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது. இப்படி நாட்டு மக்களுக்கு இல்லாமல் ஏன் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் நெருக்கடிகளை சமாளிக்க வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதை, ராகுல் காந்தி பல நாட்களாக வலியுறுத்தி வருகிறார். 

இதைச் சுட்டிக்காட்டும் விதமாக ராகுல், ‘முதலில் அவர்கள் உங்களை புறக்கணிப்பார்கள், பின்னர் உங்களை பார்த்து சிரிப்பார்கள், பின்னர் உங்களுடன் சண்டையிடுவார்கள், இறுதியில் நீங்கள் வெல்வீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version