இந்தியா

ராகுல் காந்தி தலைமையில் 14 கட்சிகள் சைக்கிள் பேரணி!

Published

on

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தலைமையில் 14 கட்சிகள் இணைந்து சைக்கிள் பேரணியை நடத்தி வருவது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக பெகாசஸ் விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவகாரம் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது தெரிந்ததே. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்வதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று ஆளும் தரப்பிலிருந்து கூறப்பட்டாலும் பெகாசஸ் விவகாரத்தை விவாதம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் பெகாசஸ் விவகாரம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ராகுல்காந்தி தலைமையில் இன்று டெல்லியில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை செய்தனர். 14 கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த ஆலோசனை செய்யப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆலோசனைக்குப் பின்னர் ராகுல் காந்தி தலைமையில் 14 கட்சியின் தலைவர்கள் டெல்லியில் சைக்கிள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டிய காட்சிகள் வீடியோவாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து அவசர ஆலோசனையில் பாஜக ஈடுபட்டுள்ளது. 14 கட்சிகள் தங்களுக்கு எதிராக ஒன்றிணைந்த நிலையில் நாடாளுமன்றத்தை நடத்துவது எப்படி? எதிர்க்கட்சிகளை சமாளிப்பது எப்படி? என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version