தமிழ்நாடு

அடுத்த தேர்தலில் ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியா?

Published

on

தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்றும் தமிழர்களின் ஒன்றிய அரசு என்பதுதான் சரியானது என்றும் பேசிய ராகுல் காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப்போவதாக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று பாராளுமன்றத்தில் தமிழர்கள் குறித்தும் தமிழ்நாடு குறித்தும் ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி, செய்தியாளர்களின் கேள்விக்கு ’நானும் தமிழன் தான்’ என பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டு மொழி, கலாச்சாரம், வரலாறு குறித்த புரிதல் ராகுல் காந்திக்கு இருக்கிறது என்றும் அதனால் தமிழ்நாட்டு மக்கள் மீது அவருக்கு தனி அன்பு இருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளாவில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல்காந்தி இந்த முறை தமிழகத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அதனால்தான் இப்போது முதலே தமிழர்கள், தமிழ்நாடு குறித்து பேசி வருவதாகவும் புறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி உறுதி என்று நிலை இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக ராகுல்காந்தி திட்டமிட்டிருப்பதாகவும் அதனால்தான் இப்போது முதலே அவர் தமிழகம் குறித்த ஆவேசமாக பேசி வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

ஏற்கனவே ராகுல் காந்திக்கும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால் தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட்டால் மிகப்பெரிய வெற்றியை தேடித் தருவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version