தமிழ்நாடு

ராகுல் காந்தி அக்கவுண்ட்ட ஹேக் பன்றது வேஸ்ட்: குஷ்பு பேட்டி

Published

on

அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பது வேஸ்ட் என்றும் அதனால் பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை என்றும் குஷ்பு பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுதான் இந்த செயலை பெகாசஸ் என்ற செயலி மூலம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என்பதும் இதனால் நேற்றும் இன்றும் நாடாளுமன்றமே ஸ்தம்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு இந்தியாவில் யாருடைய செல்போனையும் ஹேக் செய்ய முடியாது என்று கூறினார். மேலும் ராகுல் காந்தியின் செல்போனை ஹேக் செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் அவர் செல்போனை ஹேக் செய்வது வேஸ்ட் என்று தெரிவித்தார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்து இருப்பது தனக்கு பயத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அதனால்தான் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அவர் கூறினார். மேலும் சமீபத்தில் எட்டு கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவர்கூட பெண் இல்லை என்ற வருத்தம் தனக்கு இருப்பதாக கூறிய குஷ்பு தனது கவர்னர் பதவி தேவையில்லை என்றும் தான் இப்போது தான் ஆட்சிக்கு வந்து உள்ளேன் என்றும் அதனால்தான் கவர்னர் பதவியை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை அவர்களின் தலைமையில் தமிழக பாஜக நல்ல வளர்ச்சியை பெறும் என்றும் அவர் மக்களை ஈர்க்கும் தலைவராக இருப்பார் என்றும் குஷ்பு தெரிவித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version