கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் ராகுல் டிராவிட்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவி காலம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலக கோப்பை தொடர் உடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமனம் செய்வது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் கடந்த சில நாட்களாக ஆலோசனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒருமித்த கருத்தாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமனம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து ராகுல் டிராவிட் உடன் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியானது.

ஏற்கனவே என்சிஏ தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட் அந்த பதவியில் இருந்து விலகி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என சமீபத்தில் பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பயிற்சியாளர் பதவியை ஏற்க இருக்கும் ராகுல் டிராவிட் 10 கோடி சம்பளம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பயிற்சியாளர் பதவிக்காக அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய இருவரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டாலும் இரண்டு வீரர்களும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் சிலரும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ராகுல் ட்ராவிட் அந்த பதவியை ஏற்பது கிட்டத்தட்ட உறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருப்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version