கிரிக்கெட்

INDvENG – ‘சென்னை ரசிகர்களுக்காக மரண வெயிட்டிங்’- 2வது டெஸ்ட் பற்றி ரஹானே

Published

on

இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை, சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியும் சென்னை மைதானத்தில் தான் நடந்தது என்றாலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது இரண்டாவது போட்டிக்கு கட்டுப்பாடுகளுடன் ரசிகர்கள் போட்டியைக் காண அனுமதிக்கப்பட்டு உள்ளது. இப்படி ரசிகர்கள் வருவது மிகவும் உற்சாகம் அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் தற்போது 4 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை விளையாடி வருகிறது. முதல் போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக இங்கிலாந்து அணி, இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கெத்து காட்டியது. இதன் மூலம் அந்த அணி, தொடரில் 1 – 0 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது.

இதனால் நாளை நடக்கும் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா பழி தீர்க்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த டெஸ்டுக்கு ரசிகர்கள் வருவது குறித்து ரஹானே, ‘உண்மையில் ரசிகர்கள் மீண்டும் மைதானத்துக்கு வந்து எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பது மிகவும் உற்சாகமூட்டுகிறது. அப்படி ரசிகர்கள் செய்வது எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களின் கிரிக்கெட் போட்டி மக்கள் கண்டிப்பாக ரசிக்கும்படி இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version