சினிமா

கேரள மக்களுக்கு நிவாரண உதவியாக ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி தர முடிவு செய்துள்ளார்

Published

on

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தில் சிக்கியது. இதனால், நடன இயக்குநரும் ராகவா லாரன்ஸ் நிவாரணப்பணிக்கு சுமார் ரூ.1கோடி வழங்குவதாகத் தெறித்துள்ளார்.

இதுவரையில் 350 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், பல லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது, மழை வெள்ளம் வடிந்து வரும் நிலையில், நிவாரணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வரலாறு காணாத மழை, வெள்ளத்தினால் கேரளா மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. இழப்பைச் சரிசெய்ய 2500 கோடி ஆகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அந்த வகையில்,நடிகர் விஜய் ரூ.70 லட்சம், விக்ரம் ரூ.35 லட்சம், சூர்யா மற்றும் கார்த்தி ரூ.25 லட்சம், கமல் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். இந்நிலையில், நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடியை நிவாரணமாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டார் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரணமாக அளிக்க முடிவு செய்துள்ளேன். வெள்ளப்பெருக்கால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகளும், மக்களின் துயரமும் என்னை மனமுடையே செய்துள்ளன. அவர்கள் நமது சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள்.

seithichurul

Trending

Exit mobile version