சினிமா செய்திகள்

மீண்டும் ஹிந்தி காஞ்சனாவை இயக்கும் ராகவா லாரன்ஸ்?

Published

on

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் பயங்கர ஹிட் அடித்தது மட்டுமின்றி, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்து பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளன.

இந்நிலையில், பாலிவுட்டில் நடிகர் அக்‌ஷய்குமாரை வைத்து காஞ்சனா முதல் பாகத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய ராகவா லாரன்ஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அவரும், லக்‌ஷ்மி பாம் எனும் தலைப்பில் அந்த படத்தை இயக்க முடிவுசெய்து, படவேலைகளை துவக்கினார். ஆனால், தயாரிப்பு தரப்பு சரியான மரியாதையை தனக்கு கொடுக்கவில்லை என்றும், தன்னை கேட்காமல் தனது அனுமதியில்லாமல், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் என்று கூறிய லாரன்ஸ், ஹிந்தி காஞ்சனாவை தான் இனி இயக்கப் போவதில்லை எனக் கூறி சென்னைக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று படக்குழுவினர் தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும், தனக்கு இனிமேல் உரிய மரியாதை கிடைக்கும் பட்சத்தில், என்னுடைய ரசிகர்கள் மற்றும் அக்‌ஷய் குமாரின் ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்கி மீண்டும் படத்தை இயக்கலாமா வேண்டாமா என முடிவு செய்வது, இன்று அவர்கள் பேசுவதை பொறுத்துத்தான் என தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்து மீண்டும் ராகவா லாரன்ஸ் லக்‌ஷ்மி பாம் படத்தை இயக்குவார் என்றே நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version