சினிமா

பிறந்த நாளில் வெளியான ராகவா லாரன்ஸின் அடுத்த பட அறிவிப்பு!

Published

on

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே ராகவா லாரன்ஸ் ருத்ரன், அதிகாரம் மற்றும் துர்கா ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பதும், இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், இந்த கேரக்டர் இதுவரை அவர் நடிக்காத கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தை டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன என்பது குறிபிடத்தக்கது

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் 15 அடியில் மார்பிலால் ஆன ஸ்ரீராகவேந்தர் சிலை ஒன்றை நிறுவி உள்ளார். இந்த சிலை இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சுவாமி சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை வெகு விரைவில் அவர் பொது மக்கள் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version