உலகம்

மோடி முறைகேடாக பேரம் பேசியுள்ளார்..பரபரப்பை ஏற்படுத்திய ராகுல்

Published

on

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி முறைகேடாக பேரம் பேசியுள்ளார் என்று ரபேல் ஆவணங்களை காட்டி ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

ரபேல் ஊழல் விவகாரம் தற்போது மீண்டும் பெரிய பிரச்சனையாகி இருக்கிறது. ரபேல் ஊழல் தொடர்பான விசாரணைக்கு கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி இதுவரை 5 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் அந்த பரபர ஆவணம் வெளியாகி உள்ளது.

மோடி வேண்டும் என்றே, ரபேல் ஒப்பந்தத்தை மட்டுப்படுத்தும் அளவிற்கு இதை செய்தார். இதனால்தான் எச்ஏஎல்லிடம் இருந்து ஒப்பந்தம் கைமாறியது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

ரபேலில் மோடி முறைகேடான பேரத்தை நடத்தி இருக்கிறார். சிலர் ஆதாயம் பெறுவதற்காக மோடி தனிப்பட்ட பேர பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கடிதம் இதை நிரூபிக்கிறது. ரபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவின் அதிகாரத்தை பேரம் மூலம் மோடி மட்டுப்படுத்தி இருக்கிறார்

மோடி ரூ.30000 கோடியை திருடி இருக்கிறார். அந்த பணத்தை அவர் அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளார். இதைத்தான் ஒரு வருடமாக நான் கஷ்டப்பட்டு கூறி வருகிறேன். இப்போது அதை நிரூபிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு துறையின் கடிதம் வெளியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version