தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு இன்று தரவரிசை பட்டியல்: கலந்தாய்வு தேதியும் அறிவிப்பு!

Published

on

எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 349 இடங்களும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 2650 இடங்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மேலும் 1930 பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்கண்ட படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது என்றும் இதனை அடுத்து ஜனவரி 27ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறும் என்றும் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஜனவரி 30-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைனில் நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வில் www.tnmedicalselection.net, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version