ஆரோக்கியம்
மூட்டுவலியைக் குணப்படுத்தும் முள்ளங்கி!
முள்ளங்கி: (Radish)
- தொண்டை சம்பந்தமான நோயைக் குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது.
- பசியைத் தூண்டக்கூடியது.
- சிறுநீர் அடைப்பைப் போக்கும்.
- மேலும், வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.
- முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும்.
- இதன் இலை பசியைத் தூண்டி, சிறுநீர்ப் பெருக்கி தாது பலங்கொடுக்கும்.
- வாதநோய், வயிற்றெரிச்சல், தலைவலி, சீதபேதியைக் குணமாக்கும்.
- முள்ளங்கி லேசாகக் கீறினால் தோல் கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு நல்ல காய்.
உடல் சூட்டைக் குறைக்க:
வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு, கசகசாவை மிக்சியில் அரைத்து, பாலுடன் சேர்த்து, கொதிக்க வைத்து, தேவையான சர்க்கரை கலந்து பருகலாம். இது உடலைக் குளிர்ச்சியாக்கும். குழந்தைகளுக்கு பலம் தரும்.
முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம் உடல் சூடு, உடல் வறட்சி ஆகியவற்றை முள்ளங்கி குறைக்கும். உடற் சூட்டினால் ஏற்படும் பக்கவாதத்தைத் தடுக்கும்.
மூட்டுவலியைக் குணப்படுத்தும் முள்ளங்கி கீர்:
முள்ளங்கி துருவல் 50கி.தேங்காய் துருவல் 50கி, நாட்டுச்சக்கரை, ஏலக்காய்த்தூள்.
செய்முறை:
பொருட்கள் அனைத்தையும் சிறிது நீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பின்னர் தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டினால் முள்ளங்கி கீர் ரெடி. இது உடம்பில் உள்ள ஊளைச்சதையைக் குறைக்கிறது.
மேலும் நச்சுக்களை நீக்கி புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுக்கிறது. மூட்டுவலி, வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.