தமிழ்நாடு

தலைவர், பொதுச்செயலாளர் சரத்குமார், துணை பொதுச்செயலாளர் ராதிகா: மேலும் ஒரு குடும்ப கட்சியா?

Published

on

திமுக, தேமுதிக உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் சரத்குமாரின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் சரத்குமார் மீண்டும் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து மாநில துணை பொதுச் செயலாளர் பொறுப்பு சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ஆகிய மூன்று பதவிகளும் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக, தேமுதிக போலவே சமத்துவ மக்கள் கட்சியும் குடும்ப கட்சியாக மாறி விட்டதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version