தமிழ்நாடு

ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவியா? மநீம பொதுச் செயலாளர் குமரவேல் பேட்டி

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகள் கிட்டதட்ட தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து ஆகிவிட்டன. விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு பிரச்சாரம் செய்வதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மூன்றாவது கூட்டணியை அமைத்து உள்ள நிலையில் இந்த கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பு நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதல்வர் வேட்பாளர் கமல் தான் என இந்த கூட்டணியில் இணைந்துள்ள சரத்குமார் மற்றும் பாரிவேந்தர் கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி கேட்டு சரத்குமார் கட்சி கோரிக்கை விடுத்ததாகவும் இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் ’ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி என்பதை சமத்துவ மக்கள் கட்சியே மறுத்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் தினகரனின் அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version