தமிழ்நாடு

தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள்: பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே வெளியான அறிவிப்பு!

Published

on

நீண்ட இடைவேளைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன என்பதும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்று உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இடவசதி இல்லாத பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இடவசதி இல்லாத பள்ளிகளில் மூன்று நாட்கள் கழித்து தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் பள்ளி கல்லூரிகள் செயல்படுகிறது என்றும் மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அந்த பகுதிகள் பள்ளிகள் இயங்கக் கூடாது என்றும் கூறினார்.

அடுத்த இரண்டு வாரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் என்றும் ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய்தொற்று குறைந்து வந்தாலும் தடுப்பூசி செலுத்துவது மாஸ்க் அணிவது உள்பட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Trending

Exit mobile version