தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? ராதாகிருஷ்ணன் தகவல்!

Published

on

தமிழ்நாட்டில் மேலும் எட்டு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்பிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட 77 நாடுகளில் பரவி உள்ளது என்பதும் இதனால் மனித குலத்திற்கே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா டெல்டா வைரசை விட அதிக பாதிப்பை ஒமிக்ரான் ஏற்படுத்தும் என்பதால் இந்த வைரஸ் பரவும் வேகம் அதிகரித்தால் உலகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த ஆரணியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவர்கள் ஏழு பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை எடுத்து ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறியும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மேலும் எட்டு பேருக்கும் ஒமிக்ரான் தொற்று பரவியிருக்கலாம் என்றும் ஒமிக்ரான் நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களின் பரிசோதனை மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version