தமிழ்நாடு

ஒமிக்ரான் உறுதியானருடன் தொடர்பில் இருந்த 7 பேர்களின் பரிசோதனை முடிவு: ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்

Published

on

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்திலும் நுழைந்து விட்டது என்றும் நேற்று நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த ஏழு பேரின் பரிசோதனை முடிவுகள் வந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட 77 நாடுகளில் பரவி விட்டது என்பதும் இந்தியாவில் மட்டும் சுமார் 80 பேருக்கு இந்த நோய் பரவி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று வரை ஒரு ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர் இல்லை என்ற நிலையில் நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த ஏழு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து 7 பேர்களின் ஜீன் பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் அந்த பரிசோதனையின் முடிவு வந்த பிறகு அந்த ஏழு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என்பது தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version