இந்தியா

பாஜகவில் இணைந்தார் கமல், ரஜினியுடன் நடித்த நடிகை!

Published

on

கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை பாஜகவில் இணைந்து உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணையும் திரை நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ராதா நேற்று பாஜகவில் இணைந்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். மேலும் பாட்ஷா உள்பட பல திரைப் படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்த தேவன் என்ற நடிகரும் பாஜகவில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை போலவே கேரளாவிலும் பாஜகவில் திரையுலகினர் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடிகை ராதா மற்றும் நடிகர் தேவன் ஆகியோர் கேரளாவில் போட்டியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version