Connect with us

சினிமா செய்திகள்

நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி; கொதித்தெழுந்த விக்னேஷ் சிவன்!

Published

on

இயக்குநர் சக்ரி டொலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அந்த விழாவில், நடிகை நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நயன்தாரா சீதையாகவும் நடிப்பார், பேயாகவும் நடிப்பார் என்றார். அப்போதெல்லாம், சாமியாக நடிக்க கே.ஆர். விஜயாவை அழைப்பார்கள். நயன்தாராவை பற்றி நான் சொல்லத் தேவையில்லை. எத்தனையோ பிரச்னைகளும், சோதனைகளும் தாண்டி சாதனை படைத்துள்ளார்.

முன்னெல்லாம், பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடுபவர்களை சாமியாக நடிக்க வைப்பார்கள். இப்போது, பார்த்தவுடன் கைக் காட்டி கூப்பிடுபவர்களைக் கூட சாமியாக நடிக்க வைக்கிறார்கள் என்றார்.

ராதாரவி இப்படி வெளிப்படையாக பேசியுள்ளதை சுட்டிக் காட்டிய சின்மயி, இப்போதும் தமிழ் சினிமா வாயை மூடிக் கொண்டு இருக்குமா? என ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்?

ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கும் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார். இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது. இப்படி ஒரு நிகழ்ச்சி, முடிவுறாத ஒரு படத்துக்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது.

இப்படத்தை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றுதான் நான் நினைத்தேன். இப்போது நடந்தது சற்றும் பொருத்தமில்லாத நிகழ்ச்சியாகும். தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசியுள்ளனர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.

ராதாரவியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!