சினிமா செய்திகள்

பொங்கல் ரேஸில் கலந்து கொள்ளும் கதிர்!

Published

on

கடந்த ஆண்டு நடிகர் கதிருக்கு பரியேறும் பெருமாள் படம் மூலம் நல்ல புகழ் கிடைத்தது. இந்நிலையில், பொங்கல் ரேஸில் வெகு நாளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் கதிரின் சிகை படம் வெளியாகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரு படங்கள் மட்டுமே ரிலீசாகின்றன. சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் எப்போ வருவேன் என சொல்லாமல் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியது. இந்நிலையில், நடிகர் கதிர் பெண் வேடமிட்டு நடித்துள்ள சிகை பொங்கலுக்கு வெளியாகிறது. ஆனால், தியேட்டரில் அல்ல, ஜி5 வெப் மற்றும் செயலி தளங்களில் ஜி5 ஒரிஜினல்ஸாக ரிலீசாகிறது.

சிகை படம் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திற்கு முன்னாள் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெகதீஷன் சுபு இயக்கியுள்ள இந்த படத்தில், மீரா நாயர், ரித்விகா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Trending

Exit mobile version