Connect with us

சினிமா செய்திகள்

ஆர்.ஜே. பாலாஜி படம் ஹிட்டா? ஃப்ளாப்பா? – எல்.கே.ஜி விமர்சனம்

Published

on

பத்திரிகை நிருபராக பணியை தொடங்கிய ஆர்.ஜே. பாலாஜி, ரேடியோ ஜாக்கியாக மாறி பல நடிகர்களை ஈவு இரக்கமின்றி கலாய்த்து, பிரபலமடைந்தார்.

பிரான்க் கால் ஷோ தான் ஆர்.ஜே. பாலாஜியை மக்களின் மத்தியில் அறிமுகம் செய்தது. டிரோல் செய்வதில், கிண்டலடிப்பதிலும் வல்லவரான அவரை வைத்து அறிமுக இயக்குநர் கே.ஆர். பிரபு தனது சினிமா எதிர்காலத்தை சிறப்பாக துவங்கி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சினிமாக்காரர்களை கலாய்த்த ஆர்.ஜே. பாலாஜி, எல்.கே.ஜி படத்தின் மூலம் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளில் தொடங்கி இந்திய தலைவர்கள் வரை அனைவரையும் சகட்டு மேனிக்கு கலாய்த்து தள்ளுகிறார்.

நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளையும், அவர்களின் பொறுப்புகளை பற்றிய அக்கறை இல்லாமல் அவர்கள் செய்யும் காமெடி அரசியலும், அதனால், அப்பாவி ஜனங்கள் படும் துயரத்தையும் தோலுரித்து நக்கலும் நய்யாண்டியும் கலந்து காண்பித்துள்ளார் இயக்குநர்.

ஒரு சாதாரண மனிதன் லால்குடி கருப்பையா காந்தி எப்படி கவுன்சிலராக மாறுகிறார். பின்னர், அதிலிருந்து எப்படி முதல்வராக மாறுகிறார். அவருக்கு வரும் அரசியல் ரீதியான பிரச்சனைகளில் இருந்து வெற்றி பெற்றாரா இல்லையா, கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் தலைவராக வரும் பிரியா ஆனந்த், எப்படி ஆர்.ஜே. பாலாஜிக்கு உதவி செய்ய சம்மதித்து ஆர்.ஜே. பாலாஜியை தமிழ்நாட்டு முதல்வராக்குகிறார்.

தமிழ் நாட்டு முதல்வராக பெரிதாக கஷ்டப்பட தேவையில்லை, மீடியா, டிவி, சமூக வலைதளங்களை சரியாக கையாண்டாளே போதும் என்ற யுக்தியெல்லாம் சில இடங்களில் லாஜிக் மீறல்களாக தோன்றினாலும், அண்மையில் நடக்கும் நிகழ்கால அரசியல் கூத்துக்கு மத்தியில் இவைகள் லாஜிக்காகவே மாறும் மேஜிக் அதிசயம் தான்.

துணை முதல்வராக வரும் பிரபுவின் அண்ணன் ராம்குமார் போஜப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜியை அகற்றி விட்டு முதல்வர் பதவியை பிடிக்க அவர் போடும் சதித்திட்டங்கள், ஆர்.கே. நகர் எலக்‌ஷனை ஞாபகப்படுத்தும் காட்சி அமைப்பு, செல்லூர் ராஜு தர்மாக்கோல் விட்டது. மாட்டை வைத்து மத்தியில் செய்யும் மாட்டு அரசியல் என பல நிகழ்கால நிகழ்வுகளை அநியாயத்துக்கு லொள்ளு சபா ஸ்டைலில் கலாய்த்தும், ஆங்காங்கே பொதுமக்களுக்கு தேவையான சமூக சிந்தனை கருத்துகளை சிந்திக்க தூண்டும் வசனங்களும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி முதல் முதலாக ஹீரோவாக நடித்துள்ள படத்திலேயே அவர் போதுமான பவுண்டரி அடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

சில இடங்களில் இவரெல்லாம் ஹீரோவா என்று தோன்றினாலும், இந்த கதைக்கு இவர் கச்சிதமாகவே உள்ளார் என்று படத்தின் இறுதியில் தோன்றவைத்து ஸ்கோர் செய்து விடுகிறார் இயக்குநர் பிரபு.

விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில், வரும் நீ ஜித்து தாண்டி பாடல் அழகாய் இருக்கிறது. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் படத்திற்கான முதுகெலும்பாகவும், அரசியல்வாதிகளுக்கு மீண்டுமொரு சவுக்கடியை விழுகிறது.

சர்கார் படத்துக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிச்சிங்கா? இந்த படத்தை எதிர்க்கவே இல்லை என விஜய் ரசிகர்கள் புலம்பினாலும், இதை எதிர்த்தால், படத்திற்கு தான் விளம்பரம் கிடைக்கும் அரசியல் வாதிகளுக்கு ஒரு லாபமும் இல்லை என்பதால், தான் எதிர்ப்புகள் இல்லை.

லால்குடி கருப்பையா காந்தியின் பெயர் சுருக்கமான எல்.கே.ஜி பெயரில் தொடங்கி, அரசியல் செய்திருக்கும் இயக்குநர் பிரபுவுக்கும் ஆர்.ஜே. பாலாஜி அவர்களுக்கும் இந்த படம் ஹிட் தான்.

சினி ரேட்டிங்: 3.25/5.

ஜோதிடம்3 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்25 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்37 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்49 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்58 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!