டிவி

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய குயின்ஸி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published

on

பிக்பாஸ் 6 சீசன் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் குயின்ஸி வெளியேறியுள்ளார்.

குயின்ஸி பிக் பாஸ் போட்டிக்கு பிறகு எல்லோருக்கும் பரிட்சியமான முகமாக இருந்தாலும், பாண்ட்ஸ், ஹமாம், லைஃப் பாய், வைல்டு மிலன் உள்ளிட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

2019-ம் ஆண்டு குயின்ஸியின் நடிப்பில் கருப்பு கண்ணாடி என்ற படமும் உருவாகியுள்ளது. 2022-ம் ஆண்டு காபி 10 காதல் 50 என்ற குறும் படத்திலும் குயின்ஸி நடித்துள்ளார்.

நடிகர் விதார்த் நடிக்கும் விடியும் வரை காத்திரு படத்திலும் குயின்ஸி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சன் டிவியில் இப்போது ஒளிபரப்பாகி வரும் அம்பே வா சீரியிலும் இவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான குயின்ஸி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் குயின்ஸி பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு சம்பளம் பெற்றார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குயின்ஸி பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை 57 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் குயின்ஸி இருந்துள்ளார். அதன்படி குயின்ஸிக்கு 1,14,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

குயின்ஸி பிக்பாஸ் வீட்டில் ஒரு ஜாலிக்காக வந்ததாக அவரே கூறியிருந்தார். இதுவரையில் பிக்பாஸ் வீட்டில் குயின்ஸி எந்த ஒரு போட்டியிலும் தன்னை பெரிய அளவில் நிரூபிக்கவில்லை.

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜி.பி.முத்து, சாந்தி மாஸ்டர், அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து குயின்ஸி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version