சினிமா செய்திகள்
நான்கு மொழிகளிலும் வெளியான குயின் ரீமேக் டீஸர்!
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற குயின் படத்தை தென்னிந்திய மொழிகளான நான்கிலும் ஒரே சமயத்தில் ரீமேக் செய்துள்ளனர். அதன் டீஸர் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் கன்னட படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். பாரிஸ் பாரிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள தமிழ் படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். பட்டர்ஃபிளை எனப் பெயரிடப்பட்டுள்ள கன்னட படத்தில் பருல் யாதவ் நடித்துள்ளார்.
இது தவிர தெலுங்கில் தமன்னா நடித்துள்ள படத்திற்கு தட் இஸ் மகாலஷ்மி என்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடித்துள்ள படத்திற்கு ஜம் ஜம் என்ற டைட்டிலும் வைத்துள்ளனர்.
அனைத்து டீஸர்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வெளியானதால், பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.
இதில், காஜல் அகர்வாலின் தமிழ் டீஸர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.