உலகம்

95 வயதான எலிசபெத் ராணிக்கு கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி பிரார்த்தனை!

Published

on

இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் அவர்களுக்கு 95 வயது ஆகும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்து ராணி எலிசபெத் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்

நேற்று பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் 95 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது

ராணி எலிசபெத் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், ராணியாக இருந்தாலும் அவருக்கும் கொரோனா விதிக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது

மருத்துவர்களின் மருத்துவ குறிப்பில் ராணி எலிசபெத் அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதும் இருப்பினும் அவர் சில நாட்களில் வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என்றும் தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக தெரிவித்துள்ளது

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் இங்கிலாந்து ராணி விரைவில் குணமடைய வாழ்த்துவதுவதாகவும் இதற்காக தான் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்

 

seithichurul

Trending

Exit mobile version