தமிழ்நாடு

க்யூ ஆர் கோட் மூலம் நூதன மோசடி: அதிர்ச்சியில் வணிகர்கள்!

Published

on

பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை கூகுள்பே, பேடிஎம், ஆகிய செயலிகளில் க் யூ ஆர் கோடு மூலம் வாடிக்கையாளரிடம் இருந்து பணத்தைப் பெறுவது அதிகரித்துள்ளது. பத்து ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் பொருட்கள் க்யூஆர் கோட் மூலமாகவே வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவதுபோல் கடையின் வெளிப்புற சுவர்களில் க்யூ ஆர் கோடு அட்டைகள் ஒட்டப்பட்டுள்ளன. இப்படி ஒட்டப்பட்ட கியூ ஆர் கோடு அட்டைகளை பயன்படுத்தி திருப்பூரில் நூதன மோசடி அரங்கேறியுள்ளது.

திருப்பூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்ரில் இரண்டு நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் ஒருவர் அங்கு சாப்பிட்டுவிட்டு அதற்கான தொகையை க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தி உள்ளார். பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கிக்கணக்குக்கு செல்லாததால் மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து இருக்கிறார். அப்போது வழக்கமாக வரும் உணவகத்தின் பெயரில் உள்ள வங்கிக்கணக்க்கு செல்லாமல் வேறு வங்கி கணக்குக்கு பணம் சென்று இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் அங்குள்ள சிசிடிவி மூலம் விசாரணை செய்ததில் ஒரு மர்ம நபர் அப்பகுதியில் உள்ள ஓட்டல், மளிகை, கடை, தள்ளுவண்டி கடை வாசலில் ஒட்டப்பட்டுள்ள க்யூஆர் கோடு மீது புதிய க்யூ ஆர் கோடி ஒட்டிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பணம் சென்ற வங்கிக் கணக்கு விபரங்களை பெற்று மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பணபரிவர்த்தனைக்கான க்யூ ஆர் கோடை கடையில் நிரந்திரமாக ஓட்டுவதை தவிர்க்குமாறும் அவ்வப்போது க்யூஆர் கோடு மூலம் செலுத்தப்படும் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என சோதித்து கொள்ளுமாறும் வியாபாரிகளை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Trending

Exit mobile version