இந்தியா

டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் நபர்: ஒரு ஆச்சரிய தகவல்!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் முயற்சியால் டிஜிட்டல் இந்தியா உருவாகி வரும் நிலையில் பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுப்பதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்பரன் என்ற மாவட்டத்தில் உள்ள ராஜூ படேல் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போதைய டிஜிட்டல் உலகில் யாரும் பர்ஸில் பணம் வைத்திருக்கவில்லை என்றும் செல்போன் மூலமும் கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் மூலம் பெரும்பாலான பரிவர்த்தனை செய்கிறார்கள் என்பதையும் அவர் கண்டுகொண்டார்.

இதனை அடுத்து அவர் தனக்கென ஒரு க்யூஆர் கோட் அடங்கிய அட்டையை தயார் செய்து அதை கழுத்தில் அணிந்து கொண்டு பிச்சை எடுக்கிறார். இவரது செயல் அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவருக்கு செல்போன் மூலம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பலர் பணத்தை பிச்சை செய்து வருகின்றனர்.

சூழலுக்கு தக்கவாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களை டிஜிட்டலுக்கு மாற்றிக் கொண்ட நிலையில் பிச்சைக்காரனான இவரும் தன்னுடைய பிச்சைக்கார தொழிலுக்கு டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோட் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version