உலகம்

கத்தார் விசா முறையில் மாற்றம்.. வேலைக்கு சென்ற இந்தியர்கள் (என்ஆர்ஐ) தெரிந்துகொள்ள வேண்டியவை!

Published

on

வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு வேலைக்குச் செல்லும் போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் நாடு திரும்ப முடியாது என்ற விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

2018 சட்ட எண் 13-ன் கீழ் ஞாயிற்றுக்கிழமை முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய உள்நுழைவு, வெளியேற்றம் மற்றும் வீடுகள் விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் அமலுக்கு வருவதாகவும் கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பழைய கத்தார் விசா விதிகள் நவீன கால அடிமைத் தனத்தினை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாகவும் அதனைப் புதிய விதிகள் மூலம் மாற்றி நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏதேனும் காரணங்களுக்குகாகச் சொந்த நாட்டிற்குத் திரும்பச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்றால் புகார் அளிப்பதன் மூன்று நாட்களில் அந்த மனு மீது விசாரணை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் கத்தார் அமைச்சகத்திடம் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச ஊழியர்கள் அமைப்புடனான 3 வருட ஒப்பந்தத்தில் சென்ற நவம்பர் மாதம் கத்தார் அரசு கையெழுத்திட்ட பிறகு செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

2022-ம் ஆண்டுக் கத்தாரில் கால் பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ஊழியர்கள் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்குக் கத்தார் தள்ளப்பட்டுள்ளது.

கத்தாரின் பழைய விசா முறை குறித்து நீண்ட காலமாகவே நீக்க வேண்டும் என்று விமர்சனங்கள் வந்துபடி இருந்தது. கத்தார் அரசு விசா திருத்தத்திற்கான கோரிக்கையை ஏற்காமலே இருந்த நிலையில் தற்போது ஏற்று உடனே அமலுக்கும் கொண்டு வந்துள்ளது.

இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பயனடைவார்கள்.

Trending

Exit mobile version