உலகம்

ஒபெக் நாடுகளின் லிஸ்டிலிருந்து வெளியேறியது கத்தார்.. உலக நாடுகள் அதிர்ச்சி!

Published

on

டோஹா: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பு (Qatar To Leave Oil-Exporting Nations’ Group – OPEC). இதில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, கத்தார், அரபு அமீரகம் உள்ளிட்ட 15 எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உள்ளது.

இந்த நாடுகளின் மீட்டிங் வரும் டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் நடக்க உள்ளது. இந்த நிலையில் கத்தார் இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 57 வருடமாக கத்தார் இந்த அமைப்பில் இருந்தது. இந்த அமைப்பு 1960ல் தொடங்கப்பட்டது. 1961ல் கத்தார் இதில் இணைந்தது. இந்த நிலையில் 2019 ஜனவரி 1ம் தேதியோடு இந்த அமைப்பில் இருந்து வெளியேற போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version