உலகம்

குண்டு பெண்ணை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிய ஊழியர்கள்.. அதன் பின் நடந்தது என்ன?

Published

on

கத்தார் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் குண்டாக இருந்த பெண்ணை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில் நாட்டின் மாடல் ஜூலியானா என்ற 38 வயது பெண் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் லெபனானின் பெய்ரூட் என்ற நகரத்தில் இருந்து தோஹா செல்வதற்காக விமானத்தில் எகானாமிக் வகுப்பில் டிக்கெட் எடுத்திருந்தார். இந்நிலையில் அவர் விமானத்தில் பயணம் செய்ய முற்பட்டபோது விமானத்தில் அவரை பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

கத்தார் ஏர்வேஸ் ஊழியர்கள் அவர் குண்டாக இருப்பதாகவும் அதனால் எகனாமிக் விமானத்தில் அனுமதிக்க முடியாது என்றும் கூறினர். 1000 டாலருக்கு மேல் எகானாமிக் டிக்கெட் எடுத்து இருக்கும் நிலையில் 3000 டாலருக்கு மேல் உள்ள பிசினஸ் வகுப்பு எடுத்தால் மட்டுமே அவர் அனுமதிக்கப்படுவார் என்று விமான ஊழியர்கள் கூறியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஜூலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் எகனாமிக் வகுப்பில் நான் குண்டாக இருந்த காரணத்தினால் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் பிசினஸ் வகுப்பு எடுக்க என்னை கட்டாயப் படுத்தினார்கள் என்றும் அதுமட்டுமின்றி என்னை இறக்கிவிட்ட விமான ஊழியர்கள் என்னுடைய டிக்கெட் பணத்தையும் திருப்பித் தர மறுத்து விட்டனர் என்றும் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், நான் குண்டாக இருக்கிறேன் என்று என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நான் எல்லோரையும் போலவே இருக்கிறேன் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் விமான நிலைய நிறுவனத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது விமான நிறுவனம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘ஜூலியானா குண்டானவர் என்பதற்காக இறக்கிவிடப்படவில்லை என்றும் அவர் முரட்டுத்தனமாகவும் ஆக்ரோஷமாகவும் ஊழியர்களிடம் நடந்து கொண்டார் என்றும் மேலும் அவரது குழுவில் இருந்த ஒருவர் கோவிட் சான்றிதழ் இல்லை என்பதால் அவருக்கு போர்டிங் மறுக்கப்பட்டது என்றும் கூறியிருந்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3718 டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version