விமர்சனம்

‘பியார் பிரேமா காதல்’ திரை விமர்சனம்!

Published

on

இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாகத் தயாரிக்கப் பிகாபாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் இளன் இயக்கி இருக்கும் திரைப்படம் பியார் பிரேமா காதல்.

திரைப்படத்தின் பெயரை பார்க்கும் போதே அனைவருக்கும் தெரியும் இது காதல் திரைப்படம் தான் என்று. இந்தத் திரைப்படத்திற்கான அறிவிப்பு வந்து முதல் மிகவும் எதிர்பார்ப்பு இருந்த வந்த நிலையில் இந்த வாரம் வெளியாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஸ்ரீ என்ற கதாப்பாத்திரத்தில் ஹரிஷ் கல்யாணும், சிந்துஜா என்ற கதாப்பாத்திரத்தில் ரைசாவும் ரொமான்ஸ், காதல், அதில் வரும் பிரச்சனைகள், தவறான புரிதல், இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்ற படத்தின் திரைக்கதை நீள்கிறது.

ரைசாவை ஒருதலையாகக் காதலிக்கும் ஹரீஷ், திடீர் என்று ஒரு நாள் ஹரீஷ் பணிபுரியும் நிறுவனத்தில் ரைசாவும் சேர நட்பாகப் பழகத் துவங்கி காமம் வரை நீடிக்கிறது.

ரைசாவின் அப்பாவாக நாகேஷின் மகனான ஆனந்த் பாபு நடித்துள்ளார். மேற்கத்திய கலாச்சாரத்தின் எடுத்துக்காட்டாகவும் உள்ளார். தன் மகளை லீவிங் டூ கெதர் ரிலேஷன் ஷிப்பிற்குச் சாதாரனமாக அனுமதிப்பது, மகளுடன் சேர்ந்து குடிப்பது எனத் தனக்கே உரிய வகையில் நடித்துள்ளார்.

ஹரீஷ், ரைசா இருவருக்கிடையில் நட்பாக நெருக்கம் தொடர்ந்து கலவை நடந்த பிறகு ஹரீஷ் தன் காதலை வெளிப்படத்துகிறார். நான் உன்னுடன் நட்பாகத் தான் பழக்குகிறேன் என்று ரைசா தவிர்க்கிறார். பின்னர் இருவருக்கிடையில் என்ன என்பது மீதக்கதை.

இயக்குனர் நளம் முதல் படத்திலேயே லிவிங் டூகெதர் படத்தினைச் சரியாகக் கையாண்டு இருக்கிறார். யுவனின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். 12 பாடல்கள் என்றாலும் அவை திரைக்கதையுடன் ஒன்றி மேலும் பலம் சேர்க்கிறது. பின்னணி, பாடல் தயாரிப்பு எனது பணிகளை யுவன் சரியாகவே செய்துள்ளார்.

முதல் பாதியில் திரைப்படம் வேகமாகச் சென்றாலும் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டாலும் அவை பெரியதாகக் கதையின் ஓட்டத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படுத்தவில்லை.

இளைஞர்களை ஈர்க்கக் கூடிய கதை, டிரெண்டான வசனங்கள், சிறந்த கிளைமேக்ஸ் என இளன் திறமையாகத் தன் பணிகளைச் செய்துள்ளார்.

பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களுக்கு, புதுமணத் தம்பதிகளுக்கு, காதலர்களுக்கான கொண்டாட்டம் எஙிறது செய்தி சுருள் விமர்சன குழு.

seithichurul

Trending

Exit mobile version