வணிகம்
பிவிஆர், ஐனாக்ஸ் திரையரங்குகளின் 25% வருவாய் இதில் இருந்து தான் வருகிறது..!
மல்டிபிளக்ஸ் திரை அரங்குகளின் வருவாய் உணவு விற்பனை மூலம் தான் கிடைக்கிறது என்று தெரிய வந்துள்ளது. 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பிவிஆர் நிறுவனத்திற்கு உணவு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை மூலமாக மட்டும் 202.71 கோடி ரூபாயினை வருவாய் பெற்றுள்ளது.
உணவு மற்றும் குளிர்பான விற்பனையில் சென்ற ஆண்டு இதே ஜூன் காலாண்டினை விடக் கூடக் கூடுதலாக 23 சதவீதம் கிடைத்துள்ளது.
ஐனாக்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 26.8 சதவீதம் உணவு மற்றும் குளிர்பான விற்பனை மூலம் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.