சினிமா செய்திகள்

தமிழகத்தில் பிவிஆர் திரை அரங்குகள் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் திறக்கப்படும்!

Published

on

தமிழகத்தில் பிவிஆர் திரை அரங்குகள் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் திரை அரங்குகள் மூடப்பட்டு இருந்தன. ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 50 சதவீத பயனாளிகளுடன் திரை அரங்குகளைத் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

சிறிய திரை அரங்குகள் திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டன. ஆனால் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள தங்களது அனைத்து திரை அரங்குகளையும் திறக்க உள்ளதாக பிவிஆர் சினிமாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள், பார்வையாளர்களை ஈர்க்க சூப்பர் ஆஃபர்கள் உள்ளிட்டவற்றுடன் பாதுகாப்பு வசதிகளுடன் பிவிஆர் திரை அரங்குகள் திறக்கப்பட உள்ளது.

பிவிஆர் நிறுவனத்துக்குத் தமிழகத்தில் சென்னை, வேலூர், கோயம்புத்தூர் என 13 இடங்களில் 83 திரை அரங்குகள் உள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுள்ளவர்களுக்கு முதல் இரண்டு வாரத்துக்கு இலவசமாகப் பாப் கார்ன் வழங்கப்படும் எனவும் பிவிஆர் தெரிவித்துள்ளது.

புதிதாகத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடுவது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாகச் செய்திகள் ஏதும் வராத நிலையில், காஞ்சூரிங், ஹிட்மென், பிராமிஸிங் யங் வுமன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களும், பெல் பாட்டம் இந்தி படமும் திரையிடப்படமும் பிவிஆர்-ல் திரையிடப்பட உள்ளது.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள், சமூகப் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைச் சரியாகப் பின்பற்றி, அரசின் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற விதிமுறைகள் தவறாமல் பின்பற்றப்படும் எனவும் பிவிஆர் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version