சினிமா

இந்தியாவிலேயே முதல் முறை.. சென்னை சினிமா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

Published

on

இந்தியாவிலேயே முதல் முறையாக விமான நிலையத்தில் திரையரங்கு வளாகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சினிமா ரசிகர்கள் மற்றும் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிவிஆர் சினிமாஸ் சென்னையில் ஐந்து தியேட்டர்களை கொண்ட வளாகம் ஒன்றை நேற்று திறந்து உள்ளது. இந்தியாவிலேயே விமான நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள முதல் மல்டிபிளக்ஸ் தியேட்டர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், விமானத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் ஒரு திரைப்படம் பார்க்கலாம் என்பதும் அதுமட்டுமின்றி விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வரும் பயணிகள் காத்திருக்கும் அறையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது என்பதும் அந்த நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களை பயணிகளுக்கு தர வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டரை திறந்து உள்ளது.

1155 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்ட 5 தியேட்டர்கள் கொண்ட இந்த வளாகத்தில் 2K RGB+ லேசர் ப்ரொஜெக்டர்கள், ரேஸர் ஷார்ப், அல்ட்ரா-ப்ரைட் படங்கள் மற்றும் மேம்பட்ட டால்பி அட்மாஸ், அதிவேக ஆடியோவுக்கான REAL D 3D டிஜிட்டல் ஸ்டீரியோஸ்கோபிக் ப்ரொஜெக்ஷன் உள்ளிட்ட அதிநவீன சினிமா தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே பிவிஆர் சினிமாஸ் 77 ஸ்க்ரீன்களை கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஐந்து ஸ்க்ரீன்கள் அதிகரித்துள்ளது. பிவிஆர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜிலி நேற்றைய திறப்பு விழாவில் பேசியபோது, ‘எங்கள் 14வது மல்டிபிளக்ஸ் தமிழ்நாட்டில் திறக்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி திட்டங்களில் நாங்கள் நுழைந்துள்ளோம். பொழுதுபோக்கு என்பது நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கும் நிலையில் விமான பயணிகள் தங்களது ஓய்வு நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த திரைப்படங்களைப் பார்க்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

“விமான நிலையத்தில் ஒரு திரையரங்கு வளாகம் திறப்பதால் விமானங்களைப் பிடிக்க அல்லது தாமதமான விமானத்திற்காகக் காத்திருக்கும் பயணிகளுக்கு திரைப்பட அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

நேற்று தொடங்கப்பட்ட திரையரங்குகளில் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு மற்றும் பதான், அவதார் உள்பட ஒருசில படங்கள் திரையிடப்பட்டன. இந்த வளாகம் திறக்கப்பட்டதன் மூலம், 2022-23 நிதியாண்டில் 78 நகரங்களில் 182 இடங்களில் 908 ஸ்க்ரீன்களுடன் பிவிஆர் வளர்ச்சி அடைந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version