பிற விளையாட்டுகள்

அடுத்த சுற்றிலும் வெற்றி: காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து!

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் பிரிவில் அடுத்த சுற்றில் வெற்றி பெற்று இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை பிவி சிந்து அசத்தலாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று அவர் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் அபாரமாக விளையாடி காலிறுதிக்கு தகுதி பெற்றார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று அவர் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்ஃபெல்ட் என்ற வீராஙகனையை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அவர் 21-15, 21-13 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனை அடுத்து காலிறுதி மற்றும் அரையிறுதியில் வெற்றி பெற்றாலே அவருக்கு பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவின் பூஜா ராணி, தீபிகா குமாரி, மேரிகோம் ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பிவி சிந்துவுக்கும் பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிவி சிந்து பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version