பிற விளையாட்டுகள்

ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி!

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவுக்கு இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை மீராபாய் சானு அவர்கள் பளுதூக்கும் போட்டியில் பெற்றுக்கொடுத்த வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே இந்தியா வைத்திருக்கும் நிலையில் மேலும் சில பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று இருக்கிறார். இதனை அடுத்து அவர் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் குரூப் சுற்றில் இந்திய வீரர் வீராங்கனை பிவி சிந்து, ஹாங்காங் வீராங்கனை யீ நகன் செயுங் என்பவரை வீழ்த்தியுள்ளார். அவர் 21-9 21-16 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காலிறுதியில் வெற்றி பெற்றுவிட்டால் பிவி சிந்துவுக்கு பதக்கம் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் அவர் மேலும் சில வெற்றிகளை பெற்று தங்கம் வெல்ல வாழ்த்துக்கள் என்று பேட்மிட்டன் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version