உலகம்

புதினுடன் 50 நிமிடங்கள் பிரதமர் மோடி பேச்சு: உடனடியாக 4 நகரங்களில் போர் நிறுத்தம்!

Published

on

ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய சில நிமிடங்களில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரஷ்யா அதிபர் புதின் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாகவும் , உக்ரைனில் நடத்தப்பட்டுவரும் போர் குறித்து பிரதமர் மோடியிடம் புதின் விளக்கம் அளித்ததாகவும் வெளியாகி உள்ளன. மேலும் உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்டுக்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை நடத்திய சில நிமிடங்களில் இந்திய மாணவர்கள் அதிகமாக வாழும் நான்கு முக்கிய நகரங்களில் போர்நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version