சினிமா செய்திகள்

ஹெல்மெட் போடுங்க – வலியுறுத்திய தமன்னா!

Published

on

வேலூரில் புதிதாக தொடங்கப்பட்ட பிரபல நகைக்கடை ஒன்றின் கிளை கடை திறப்பு விழாவிற்கு நடிகை தமன்னா சென்று கடையை திறந்து வைத்தார். அப்போது, வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்திலி, தமன்னாவிடம் வைத்த கோரிக்கையை ஏற்ற தமன்னா, அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களிடம், “கட்டாயம் ஹெல்மெட் போடுங்க.. சீட் பெல்ட்டையும் அணிய மறக்காதீங்க.. போக்குவரத்து விதிகளை மதிச்சாத்தானே விபத்து இல்லாம வீட்டுக்கு போய், உங்க குடும்பத்தோட ஹாப்பியா இருக்கலாம்” எனக் புன்னகையுடன் போக்குவரத்து விதிமுறைகளை வலியுறுத்தினார்.

தமன்னா சொன்னதும் கேட்டு விடுவது போல, அங்கிருந்த இளைஞர்கள் தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தனர். தமன்னா கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்ததால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் தமன்னா பதிலளித்தார். அப்போது, விரைவில் சீனுராமசாமி இயக்கத்தில் உதய்நிதி ஸ்டாலினுடன் நடித்துள்ள கண்ணே கலைமானே இந்த ஆண்டின் துவக்கத்திலே வெளியாகிறது. அதை தொடர்ந்து தேவி 2 வெளியாகிறது என்றார்.

திருமணம் பற்றிய கேள்விக்கு, நல்ல மாப்பிள்ளையா இருந்தா, நீங்களே பார்த்து சொல்லுங்க என ரசிகர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version