சினிமா

ஒரே நாளில் சாதனை படைத்த புஷ்பா… மாஸ் காட்டும் அல்லு அர்ஜூன்….

Published

on

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் டிசம்பர் 17ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இ

ப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ‘புஷ்பா’ படக்குழுவினர் சென்னை, திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் புரமோஷன் செய்தனர்.

pushpa

எனவே, இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இப்படத்தின் பாடல்கள் யுடியூப்பில் ஹிட் அடித்தது. ‘ஊ சொல்றியா’ மற்றும் ‘ஏ சாமி’ஆகிய 2 பாடகளும் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்து ஹிட் அடித்தது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் இருந்து மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திரையுலகினர் கணித்தனர்.

அதன்படியே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளிலேயே ரூ.47.50 கோடி வசூலை செய்து சாதனை படைத்துள்ளது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Trending

Exit mobile version