ஆன்மீகம்

புரட்டாசி விரதம்: எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்? முழுமையான வழிமுறைகள்!

Published

on

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விரத முறையாகும். இந்த மாதத்தில் பெருமாளுக்கு உரிய சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பூஜைகள் செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்ளலாம். இவ்விரதத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.

புரட்டாசி விரதத்தின் முக்கியத்துவம்:

புரட்டாசி மாதத்தின் முழு காலமும் அசைவம் தவிர்க்கப்பட வேண்டும் என்பது முதன்மை. இந்த மாதத்தில் ஆவகத்தை தவிர்த்து, பெருமாளை முழுமையாக பக்தியுடன் வழிபட வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து தலுகை போடும் வழக்கம் இருக்கிறது.

தலுகை போடுவது எப்படி?

முதலில் சிறிய சொம்பை சுத்தமாகத் தூய்மைப்படுத்தி அதில் துளசி மாலையை சுற்றிக் கொள்ள வேண்டும். சொம்பில் நாமம் வைத்து, வீடுவீடாக சென்று தலுகையை ஏற்றுச் செல்ல வேண்டும். தலுகை என்பது அகந்தையை அழிக்கும் என முன்னோர்கள் நம்புகிறார்கள்.

பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் முறைகள்:

தலுகை மூலம் எடுத்து வரும் அரிசி மற்றும் பணத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியமாக புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் போன்றவற்றை படைத்து, வடை மாலை சாற்றி பூஜை செய்ய வேண்டும். பூஜையின் போது துளசி தீர்த்தம் கட்டாயம் இருக்க வேண்டும்.

விரதம் கடைபிடிக்கும் முறை:

விரதத்தை பெண்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரும் கடைபிடிக்கலாம். இந்த விரதத்தின் போது பச்சைத் தண்ணீர் கூட அருந்தக் கூடாது. பூஜையை எமகண்டம் தொடங்குவதற்கு முன் முடித்தல் மிக முக்கியம். முடித்த பிறகு காக்கைக்கு உணவை வைத்து, அதன் பிறகே நாம் உணவுக்குத் தொடங்க வேண்டும்.

விரத முடிந்த பிறகு:

மாலை நேரத்தில் கோயிலுக்கு சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும். முடிந்தால் மற்றவர்களுக்கு அன்னதானம் செய்து புண்ணியம் சேர்க்கலாம்.

 

Poovizhi

Trending

Exit mobile version